news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டு. கல்லடி பாலத்தில் தன்னைதானே கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த ஆண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி

10 Jul, 2026
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.World News

குறித்த பாலத்தில் சம்பவதினமான இன்றைய தினம் பகலில் திடீரென வீதியில் வந்த ஆண்ணொருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு, தனது கழுத்தை தானே வெட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததை அடுத்து, வீதியால் வந்த பொதுமக்கள் பொலிஸார் இணைந்து குறித்த நபரை பிடித்து கை  மற்றும் கால்களை கட்டி 1919 அம்புலன்ஸசில் ஏற்றி மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், மனநோய் கொண்டவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!