news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மன்னார் மடு பிரதான வீதியில் கார் மரத்தில் மோதி விபத்து: வயேதிபப்பெண் உயிரிழப்பு

18 Oct, 2026
மன்னார் மடு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் வயேதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்புப் பகுதியில் இருந்து கார் ஒன்றில் நான்கு பேர் மடுத் தேவாலயம் நோக்கிப் பயணித்துள்ளனர்.

மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை வந்தடைந்து மடு பிரதான வீதியூடாகச் சென்றுகொண்டிருந்த போது, மடு தேவாலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு முன்பு கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்குப் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்ற மூன்று பேரும் மேலதிக சிகிச்சைக்காகப் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையிலிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் 55 வயதுடைய பெண் ஆவார். அவரது சடலம் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கமே இந்த விபட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மடுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!