மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பேருந்தில் பயணித்த 20 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் அடம்பன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!