news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மருத்துவர்களே கைவிட்ட பிறகும் காதலால் மீண்ட உயிர்! : 7 ஆண்டுகளாக உயிருக்குப் போராடிய கணவனைக் காப்பாற்றிய மனைவி - மனதை உருக்கும் ஜப்பானிய தம்பதியின் காதல் கதை

02 Nov, 2026

மருத்துவர்களே கைவிட்ட பிறகும் காதலால் மீண்ட உயிர்! : 7 ஆண்டுகளாக உயிருக்குப் போராடிய கணவனைக் காப்பாற்றிய மனைவி - மனதை உருக்கும் ஜப்பானிய தம்பதியின் காதல் கதை   
02 Nov, 2026 | 04:31 PM
image

7 ஆண்டுகளாக வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கணவன், தன் காதல் உணர்வுப் பகிர்தலாலும் விடாமுயற்சியாலும் மெல்ல மெல்ல தன் கணவனை மீட்டெடுத்த மனைவி ஆகிய சீன தம்பதியர் இருவரும் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பிரபலமாகி வருகின்றனர். 

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஜாவோ மற்றும் சொங்மெய் தம்பதியினரின் வாழ்க்கை அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வாழ்வில் எதிர்பாராத விதமாக ஒரு சோக சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்றது. 

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், கிடங்கு ஒன்றின் மேற்கூரையில் சிக்கித் தவித்த மூன்று வயது குழந்தையைக் காப்பாற்ற ஜாவோ முயன்றார். குழந்தையைக் காப்பாற்றி கீழே இறங்கும்போது எதிர்பாராத விதமாக சுமார் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படக்கூடாது என்பதற்காக குழந்தையைத் தன் மார்போடு அணைத்தபடி கீழே விழுந்தவரின் தலையில் பலத்த அடிபட்டதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.

பல மாதங்களாகியும் ஜாவோவுக்கு சுயநினைவு திரும்பவில்லை. தொடர் சிகிச்சைக்குப் பிறகு, இனி ஜாவோவுக்கு சுயநினைவு திரும்ப வாய்ப்பே இல்லை என்றும் மாதக்கணக்கில் அவரை பராமரிப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

ஆனால், தன் கணவனை ஒருபோதும் பாரமாகக் கருதாத மனைவி சொங்மெய், "என் மீது அவர் வைத்திருக்கும் காதல் உண்மையானால் அவர் மீண்டு வருவார். நிச்சயம் அவரை மீட்பேன்" என்ற வைராக்கியத்துடன் மருத்துவமனையிலேயே தினமும் அருகில் இருந்து கணவனை பராமரித்து வந்தார். 

மருத்துவர்களின் ஆலோசனையின்படி மசாஜ் செய்வது, கணவரின் காதருகில் சென்று பழைய இனிய நினைவுகளைத் தினமும் பகிர்ந்து கொள்வது, கை கால்களை நீவிவிடுவது  முதலான செயல்களில் தினமும் தொடர்ச்சியாக செய்துவந்தார். 

“உள்மனம் உணரும்” என்ற நம்பிக்கையோடும் காதலோடும் சொங்மெய், தன் கணவனை காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை. 

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024இல் ஜாவோவின் உடலில் இலேசான அசைவு தென்பட்டது. அதைத் தொடர்ந்து தீவிர மறுவாழ்வுப் பயிற்சிகள் அவருக்கு அளிக்கப்பட்டன.

சில மாதங்களுக்கு முன்பு ஜாவோவின் கண்கள் திறந்தன. அருகில் நின்ற மனைவியைப் பார்த்ததும் அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கணவரின் தலையை கோதிய சொங்மெய், "நீங்கள் அழக்கூடாது" என்றார். 

அப்போது சிரமப்பட்டுத் திரும்பிய ஜாவோ, மழலை மொழியில் "ஐ லவ் யூ" என்றார். அதைக் கேட்டு நெகிழ்ந்துபோன சொங்மெய் தன் கணவரை ஆரத் தழுவிக்கொண்டார்.

தற்போது தன் கைகளை உயர்த்தி பதில் அளிப்பது, சிறிது நேரம் எழுந்து நிற்பது என  ஜாவோவின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்னும் சில மாதங்களில் அவர் பூரணமாக குணமடைந்துவிடுவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!