news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகோற்சவத் தேர்த் திருவிழா - வீடியோ

12 Aug, 2026

 வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2026 ஓகஸ்ட் 11) பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடந்த ஜூலை 19 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமான இக் கோவில் மகோற்சவப் பெருவிழாக்கள், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

 மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழாவான வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்த் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.

ஆடி அமாவாசை தினமான நாளை புதன்கிழமை (2026 ஓகஸ்ட் 12) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. தீர்த்தத் திருவிழாவிற்காக மாவிட்டபுரத்திலிருந்து காலை கீரிமலை நோக்கிப் புறப்படும் மாவை கந்தனுக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை கண்டகி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறும்.

ஆடி அமாவாசை தினமான நாளை, தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் விசேட பிதிர் பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து கண்டகி தீர்த்தக் கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06.00 மணிக்கு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் புறப்படும் வரலாற்றுப் பவனி நிகழ்வு நடைபெறும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!