news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முதியவர்கள் இருவர் கற்களால் தாக்கி படுகொலை

22 Oct, 2026
காலி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த இரு முதியவர்கள் கற்களால் தலையில் தாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் வஞ்சாவல  பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.
சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் உயிரிழந்த முதியவர்களுக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி ஆகியவற்ரையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!