news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மேலதிக வரி விதிப்புக்கு முன் கடன் பத்திர முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்: வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

22 May, 2026
வாகன இறக்குமதியின் போது சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீத மேலதிக வரி விதிப்பதற்கு முன்னதாக, அதற்கான கடன் பத்திரங்கள் (LC) திறப்பதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து அரசாங்கம் முழுமையாக ஆராய வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வாகன இறக்குமதி செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், புதிய வரி விதிப்புகளுக்கு முன்பு கடந்த கால நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை அவசியமென்றும் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக (டொலரின் விலை உயர்வால்), இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அரோஷ ரொட்ரிகோ, இதன் விளைவாக உள்நாட்டு வாகன சந்தையில் எதிர்காலத்தில் மேலும் கடுமையான விலை உயர்வு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!