news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மோஹினி எல்ல பகுதியில் முச்சக்கர வண்டி செங்குத்தான பள்ளத்தில் பாய்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு

22 Jul, 2026
நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோஹினி எல்ல பகுதிக்கு அருகில் செங்குத்தான பள்ளத்தில் புதன்கிழமை (22) காலை 7.30 மணிக்கு பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், இரண்டு குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, விபத்து நிகழ்ந்தபோது அந்த முச்சக்கர வண்டியில் இரண்டு முதியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பயணிகள் பயணித்துள்ளனர்.

விபத்தில் இரண்டு முதியவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; பலத்த காயமடைந்த இரண்டு குழந்தைகளும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!