news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாரென தெரிகிறதா?: இவள் யாரென தெரிகிறதா?

16 Oct, 2026
மொரட்டுவை - ராவதாவத்தை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் ஏ.டி.எம்  அட்டையைப் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பில் கொஹுவல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பெண் ஒருவர் குறித்த ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி கொஹுவல மக்கள் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஏ.டி.எம் இயந்திரத்தின் சி.சி.ரி.வி  காட்சிகளிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்களின்படி, குறித்த பெண் சந்தேகநபரை கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர் குறித்த ஏதேனும் தகவல் அறியின் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்:

பொறுப்பதிகாரி / கொஹுவல: 071 - 8591669

பொலிஸ் நிலையம் / கொஹுவல: 011 - 2853929

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!