news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் 4 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

25 May, 2026

யாழ்ப்பாணத்தில் பிறந்து நான்கு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரணி – இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை கடந்த 23 ஆம் திகதி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும், குழந்தையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் யாழ்ப்பாண பகுதியில் பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!