news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் கோர விபத்து : தந்தை, மகன் மரணம்

14 Nov, 2026
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, நுணாவில் - பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் நேற்று (13) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற  51 வயதுடைய தந்தையும், 9 வயதுடைய அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!