யாழ்ப்பாணம் - கண்டி A9 பிரதான வீதியின் மதவாச்சி, புனேவ பகுதியில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக புனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியின் 160ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (5) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மகவ, பளல்ல பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று, எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கார் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்து மதவாச்சி வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புனேவ பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!