யாழ்ப்பாணம்,கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் ஒன்றை வழிமறித்து சோதனையிட்டபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொடிகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!