யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (05) இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும், முச்சக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏனைய இருவருக்கும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தொடர்புடைய செய்தி
புத்தூரில் டிப்பர்–முச்சக்கரவண்டி மோதி விபத்து: மூன்று இளைஞர்கள் கவலைக்கிடம்
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், திடீரெனக் குறுக்கே சென்ற முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியின் மீது ஏறியதில், அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களின் கால்களும் நசுங்கிப் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறியமுடிகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!