news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 81kg என மதிப்பீடு

28 Sep, 2026
- சந்தேகநபர் ஒருவர் படகொன்றுடன் கைது

இலங்கை கடற்படையினர் வடக்குக் கடற்கரையில் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 81 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் இன்று (27) காலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட சுமார் 81 கிலோகிராம் போதைப்பொருள் தொடர்பாக, யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 45.5கி.கி. ஐஸ் மற்றும் 35.7 ஹெரோயின் உள்ளிட்ட சுமார் 81 கிலோகிராம் போதைப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது, இக்கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேகநபர் படகொன்றுடன் இவ்வாறு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!