யாழ்.சாவகச்சேரி அரசடி புகையிரத கட வையில் புகையிரதத் துடன் மோட்டார் சைக் கிள் மோதி விபத்துக் குள்ளானதில் பிரதேச செயலக உத்தியோ கஸ்த்தரும், அவருடைய 6 வயதானமகளும் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் இடம்பெற்ற மேற்படி விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் பிள்ளையை ஏற்றிக்கொண்டு புகைரத கடவையை கடக்க முயன்ற போது புகையிரதத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 6 வயதான மகள், சிறிய காயங்களுடன் தெய்வா தீனமாக தப்பியுள்ள நிலையில், 38 வயதான தாய் படுகாயம டைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற புகையிரத கடவையில் அபாய சமிக்ஞை விளக்குகள் உள்ளபோதிலும், தடுப்புகள் இல்லாமையால் கவன யீனத்தால் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!