news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யேமனின் ஹூதி முஸ்­லிம்­களின் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து தப்­பிக்க அமெ­ரிக்கா, இஸ்­ரே­லிடம் பாது­காப்பு கோரி மன்­றாடும் சவூதி!

29 Sep, 2026


தமது பிராந்­தி­யத்தில் வெளி­நாட்டுச் செல்­வாக்கை கடு­மை­யாக எதிர்க்கும் யேமனின் அன்­சார்­அல்லா என்றும் ஹூதிகள், என்றும் அழைக்­கப்­படும் முஸ்லிம் போரா­ளிகள், தமது தாய் நாட்டில் தங்­க­ளது அர­சியல் மற்றும் சமய மேலா­திக்­கத்தை நிலை­நாட்ட, கடந்த பல தசாப்­தங்­க­ளாக கடு­மை­யாகப் போராடி வரு­கின்­றனர். 

சவூதி ஆத­ர­வுடன் செயற்­படும் இன்­றைய யேமன் அரசை தூக்­கி­யெ­றிந்து முழு நாட்­டையும் ஆட்சி செய்­வதே அவர்­களின் முக்­கிய குறிக்­கோ­ளாக இருந்து வரு­கின்­றது. அவர்கள் இப்­போது வட­மேற்கு யேமனின் பெரும் பகு­தி­யான தலை­நகர் சனா உட்­பட மேலும் பல முக்­கிய மூலோ­பாய பகு­தி­களை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­துள்­ளார்கள். எஞ்­சி­யுள்ள பகு­தி­க­ளையும் கைப்­பற்ற தரை வழி­யா­கவும் ஏவு­க­ணை­களைப் பாவித்தும் தீவிர போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.


2026 செப்­டம்பர் 13, ஆம் திகதி, ஹூதிகள் தெற்கு சவூதி அரே­பி­யாவில்   கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் கடல் வழி ஏவு­கணைத் தாக்­கு­தலைத் தொடங்­கினர். ஒரு கட்­டளை மற்றும் கட்­டுப்­பாட்டு மைய­மான, ஓர் இரா­ணுவத் தளத்தைத் தாக்கி,  அதன் வெடி­ம­ருந்து கிடங்கை அழித்­தனர். ஹூதி படைகள் மூலோ­பாய கட­லோர நக­ர­மான மோகாவைக் கைப்­பற்றி, முக்­கி­ய­மான கப்பல் வழி பாதை­யான பாப் எல்-­மண்டேப் நீரி­ணை­யையும் மூடினர்.

சவூதி முடிக்குரிய இள­வ­ரசர் சல்மான், அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்­போடு இரண்டு தட­வைகள் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு ஹூதி­களின் இரா­ணுவத் தாக்­கு­தல்­களைத் தடுக்­கவும், அவர்­களின் முன்­னே­றத்தை தடுக்­கவும் உதவி கோரினார்.  

இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்கா எண்­ணற்ற குற்­றங்­களைப் புரிந்­துள்ள போதிலும், இஸ்­லாத்தின் தேச­மான சவூ­தியின் சர்­வா­தி­கார மற்றும் ஒடுக்­கு­முறை ஆட்சி,  தனது பாது­கா­வ­ல­ராகக் கரு­து­வது அமெ­ரிக்­கா­வைதான் என்­ப­தையே இது புலப்­ப­டுத்­து­கின்­றது. அதன் சுய இருப்­புக்­கா­கவும் அமெ­ரிக்­கா­வையே அது நம்­பி­யுள்­ளது. அதற்கு ஈடாக அந்தப் பிராந்­தி­யத்தை ஸ்திர­மின்­மைக்கு உட்­ப­டுத்­தவும் அரங்­கேற்­றப்­படும் அமெ­ரிக்­க-­-இஸ்­ரே­லிய கூட்டு நாச­கார சதித்­திட்­டங்­க­ளுக்கு சவூதி அரே­பிய ஆட்சி தாரா­ள­மாக உதவி வரு­கின்­றது.


நிலைமை இப்­படி இருக்­கின்ற போதிலும், சில மாதங்­க­ளுக்கு முன்பு  அரேபியாவினால் பில்­லியன் டொலர் செலவில் வர­வேற்பும், அந்த வர­வேற்பின் போது 600 பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான முத­லீ­டுகள் வழங்­கப்­பட்டன. எனினும், ட்ரம்ப், தொலை­பேசி மூலம் சல்மான் விடுத்த கோரிக்­கைக்கு செவி­சாய்க்க  மறுத்­து­விட்டார். அது மட்­டு­மன்றி சவூதி அரே­பி­யாவின் இரா­ணுவத் தளத்தின் மீது ஹூதிகள் ஏவு­க­ணைகள் மூலம் தாக்­குதல் நடத்­தி­யது, எனது பிரச்­சினை அல்ல என சல்­மா­னுக்கு ட்ரம்ப் பதி­ல­டியும் கொடுத்­துள்ளார்.  


அதன் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய ட்ரம்ப், “ஹூதிகள் எங்­ளோடு தொடர்பு கொண்­டார்கள். அவர்கள் எங்­க­ளுடன் மோதிக் கொள்ள விரும்­ப­வில்லை என்று  கூறி­னார்கள். நாங்கள் அவர்­களைப் பின் தொடர்­வதை அவர்கள் விரும்­ப­வில்லை. அமெ­ரிக்க படை­க­ளுடன் மோதலைத் தவிர்த்துக் கொள்­வற்­கான விருப்­பத்தை ஹூதிகள் எமக்கு சமிக்­ஞைகள் மூலம் தெரி­வி­துள்­ளார்கள். இருப்­பினும் அவர்கள்  சவூதி அர­சுக்கு விரோ­த­மான போக்­கி­லேயே உள்­ளனர்.  பெரும்­பா­லான வணிகக் கப்­பல்­களை, இப்­ப­குதி வழி­யாக பாது­காப்­பாக செல்ல ஹூதிகள் அனு­ம­தித்­துள்­ளனர்” என்றும் ட்ரம்ப் கூறினார்.  

அதனைத் தொடர்ந்து நம்­பிக்­கை­யற்ற நிலைக்குத் தள்­ளப்­பட்ட சல்மான், இஸ்­ரே­லுடன் ஏற்­கெ­னவே நெருங்­கிய இர­க­சிய உற­வு­களை பேணி வந்த நிலையில், பலஸ்­தீ­னர்­களை இஸ்ரேல் இனப்படு­கொலை செய்­வ­தற்கும், காஸாவை அழிப்­ப­தற்கும் கூட தாரா­ள­மாக உதவி வந்த பின்­ன­ணியில், ஹூதிகளின் முன்­னேற்­றத்தை தடுக்க இஸ்­ரே­லி­டமும் உத­வி­களை கோரினார் என்றும் செய்­திகள் வெளி­யா­கின.


பாப் அல்-­மண்டேப் நீரிணை வழி­யான போக்­கு­வ­ரத்தை தடுக்க, ஹூதிகள் எடுத்த நட­வ­டிக்­கையை முறி­ய­டிக்க, அமெ­ரிக்க மத்­திய கட்­டளை பணி­யத்தின் மூலம், சல்மான் இஸ்­ரே­லுக்கு மறை­மு­க­மாக கோரிக்கை விடுத்­த­தாக இஸ்­ரேலின் “இஸ்ரேல் ஹயோம்” பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யாஹு,  ஹவுத்­தி­க­ளுக்கு எதி­ராக ஒரு "விரி­வான போரில்" பங்­கேற்க விருப்பம் தெரி­வித்­துள்ளார் என்றும் தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன.


சவூதி அரே­பியா மீது ஈரானில் இருந்தும்,  ஹூதிகள் மற்றும் ஈராக்­கிய போராளிக் குழுக்கள் மத்­தியில் இருந்தும் சம­கா­லத்தில் பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்தம், "அமை­தி­யான முறையில் இஸ்­ரே­லிய- சவூதி பாது­காப்பு ஒத்­து­ழைப்­புக்கு வழி­ய­மைக்க கூடும்” என்று தேசிய பாது­காப்பு ஆய்­வுகள் நிறு­வ­னத்தின் ஆராய்ச்­சி­யாளர் யோயல் குசான்ஸ்கி சுட்டிக் காட்டி உள்ளார். இந்த ஒத்­து­ழைப்பு உளவுத் தக­வல்கள், ஆரம்ப கட்ட எச்­ச­ரிக்­கைகள் மற்றும் ஏவு­க­ணைகள் மற்றும் ட்ரோன்­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு என்­ப­ன­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­கலாம் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந் நிலையில் ஹூதி­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களில் சவூதி  அரே­பி­யா­வுக்கு, தனது இரா­ணுவ ஆத­ரவை பிரிட்டன் அறி­வித்­துள்­ளது.  இதன் மூலம் ஏற்கெனவே பல முஸ்லிம் நாடு­களை அழித்­துள்ள, இஸ்ரேல் பிரிட்டன் கூட்­ட­ணிக்கு, சவூ­திக்கு உத­வு­வது என்ற போர்­வையில் வளை­குடா பிராந்­தி­யத்தை அழிக்க மற்­றொரு வாய்ப்பை சவூதி வழங்­கி­யுள்­ளது.

உல­கெங்­கிலும் உள்ள தங்கள் சொந்த மக்­க­ளையும், இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­க­ளையும் கைவிட்டு விட்டு, தங்கள் சுய இருப்­புக்­காக அமெ­ரிக்­காவை நம்­பி­யி­ருந்த சவூதி மற்றும் பிற ஒடுக்­கு­முறை அரபு சர்­வா­தி­கார நாடுகள், முஸ்லிம் மத்­திய கிழக்­குக்கு பெற்றுத் தந்­துள்ள வெட்கக் கேடான நிலைமை இதுதான்.

பிரிட்­டனும் பிரான்ஸும் மத்­திய கிழக்கைப் பிரித்து, தங்­க­ளுக்கு சேவை செய்ய பொம்மை அர­சு­களை நிறு­விய முத­லா­வது உலகப் போர் காலம் முதல், இந்த நிலை தொடர்ந்து நீடித்து வரு­கின்­றது.

இன்று மத்­திய கிழக்கில் உள்ள சர்­வா­தி­கா­ரிகள் அனை­வரும் முஸ்லிம் மத்­திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள அமெ­ரிக்­க,-­பிரித்தானிய, ஐ­ரோப்­பிய மற்றும் இஸ்­ரே­லிய சதித் திட்­டங்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்­காக தங்கள் சொந்த மக்­க­ளையும் இஸ்­லாத்­தையும் காட்டிக் கொடுத்­துள்­ளனர்.

இன்று சவூதி அரே­பியா பெரும் அழுத்­தத்தை எதிர் கொண்­டுள்­ளது. ஹூதிகளின் ஏவு­கணை மற்றும் ட்ரோன் தாக்­கு­தல்கள் கார­ண­மாக தனது  மிகப் பெரிய எண்ணெய் விநி­யோக மார்க்­க­மான சவுதி - கிழக்கு - மேற்கு எண்ணெய் குழாய் விநி­யோகத் திட்­டத்தை மூட வேண்­டிய கட்­டாய நிலைக்கு அது தள்­ளப்­பட்­டுள்­ளது.

இதனால் சர்­வ­தேச மட்­டத்தில் மசகு எண்ணெய் விலை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. அதே­வேளை, சவூதி தலை­மை­யி­லான “மக்கா  ஒப்­பந்­தத்தின்" கீழ் உள்ள பிராந்­திய நட்பு நாடு­களும் (பாகிஸ்தான் மற்றும் துருக்கி ) இந்த விட­யத்தில் இரா­ணுவ ரீதி­யாக தலை­யிட மறுத்­து­விட்­டன.  தங்­க­ளது ஒப்­பந்தம் தாக்­குதல் நோக்கு கொண்­ட­தல்ல மாறாக அது தற்­காப்பு நோக்கம் கொண்­டது என்று அவை முத்­திரை குத்­தி­யுள்­ளன. இந்த வகையில் உண்­மையில் ஹூதி தாக்­கு­தல்கள், மக்கா ஒப்­பந்­தத்தை ஒரு காகிதப் புலி­யா­கவே மாற்­றி­யுள்­ளது.

2014முதல், ஹூதிகள், யேமன் அரசை ஆத­ரிக்கும் சவுதி அரே­பியா தலை­மை­யி­லான கூட்­ட­ணியை எதிர்த்துப் போராடி வரு­கின்­றனர். இது 2022ஆம் ஆண்டில் ஐ. நா. மத்­தி­யஸ்தம் மூல­மான போர் நிறுத்த ஏற்­பாட்டின் மூலம் சற்று அமை­தி­யா­னது. அதன்­பி­றகு காஸாவில், இஸ்­ரேலின் இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து செங்­கடல் வழி­யாக பய­ணிக்கும் கப்­பல்கள் மீது ஹூதிகள் தமது தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தனர்.  இதற்கு அமெ­ரிக்கா  பதி­லடி கொடுத்­தது. இது பிராந்­திய மோதலில் யேமனின் சிக்­க­லான நிலையை மேலும் ஆழ­மாக்­கி­யது.  

செங்­கடல் கரை­யோர பகு­தி­களில் ஹூதி போரா­ளி­களின் துரித முன்­னேற்றம், பாப் எல்-­மண்டெப் நீரி­ணையின் முக்­கிய பகு­தி­களில் கப்பல் போக்­கு­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு வச­தி­யான ஒரு கேந்­திர முக்­கியம் மிக்க நிலையில் அவர்­களை வைத்­துள்­ளது. அதே நேரத்தில் அமெ­ரிக்­கா­விற்கு எதி­ராக ஈரானின் கரங்­க­ளையும் அது வலுப்­ப­டுத்தி உள்­ளது.  


ஹூதிகள் ஒரு இரா­ணுவ வெற்­றியை அடைந்­துள்­ளனர். இது பாப் எல்-­மண்டெப் பகு­தியை முழுக் கட்­டுப்­பாட்டில் வத்­தி­ருக்கும் வகையில் அவர்­களை ஒரு படி மேலே நகர்த்தி உள்­ளது" என்று கடல் பாது­காப்பு குழு­வான டிரைட் குளோ­பலின் தலைமை நிர்­வாக அதி­காரி கோரி ரான்ஸ்லெம் கூறி உள்ளார். "ஹோர்முஸ் ஜல­சந்­தியில் ஈரான் கொண்­டுள்ள கட்­டுப்­பாட்டை விட, பாப் எல்-­மண்­டெப்பில் ஹூதிகள் கட்­டுப்­பாட்டை கொண்­டி­ருப்­பது, உண்­மையில் எளி­தாக இருக்கும் என்று நான் நினைக்­கின்றேன். ஏனெனில் அமெ­ரிக்­கா­வுக்கு இந்தப் பகு­தியில் உறு­தி­யான இரா­ணுவ வளங்­களோ அல்­லது சொத்­துக்­களோ இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.

ஹூதிகள் மேலும் வலு­வ­டைந்து, செங்­க­டலின் மத்­தியில், எரித்­தி­ரி­யா­வுக்கு குறுக்கே அமைந்­துள்ள ஹனிஷ் தீவு­க­ளிலும் தமது துருப்­புக்­களை நிலை கொள்ள செய்­துள்­ளனர். யேமனின் மோச்சா மீன­வர்­களின் நகரம் தற்­போது போரா­ளி­களின் நக­ர­மாக மாறி உள்­ளது. இதற்­கி­டையில், ஹூதி படைகள் தெற்கே பாப் எல்-­மண்டேப் நீரி­ணையை கடந்து ‘பெரிம்’ என்ற தீவு நோக்கி தொடர்ந்து முன்­னேறி உள்­ளன.

1962 ஆம் ஆண்டில், இடம்­பெற்ற ஒரு புரட்சி, வட யேமனில் சைதி இமாம் சாதாவின் 1,000 ஆண்­டு­க­ளுக்கும் மேலான ஆட்­சியை முடி­வுக்குக் கொண்டு வந்­தது. மேலும் அவர்கள் அதி­கா­ரத்­தி­லி­ருந்து வீழ்ச்­சி­ய­டைந்­ததில் இருந்து இப்­ப­குதி பெரும்­பாலும் பொரு­ளா­தார ரீதி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்­டது மற்றும் வளர்ச்­சி­ய­டை­யாமல் உள்­ளது. யேமன் அர­சாங்­கத்­திற்கு இந்தப் பிர­தே­சத்தில் போதிய அதி­கா­ரங்கள்   இல்லை.  

 ஹூதிகள் "சகல யேம­னி­யர்­களும் விரும்பும் விட­யங்­க­ளுக்­காக போரா­டு­கின்­றார்கள் அர­சாங்கப் பொறுப்­புக்­கூறல், ஊழ­லுக்கு முற்­றுப்­புள்ளி, வழக்­க­மான பயன்­பா­டுகள், நியா­ய­மான எரி­பொருள் விலைகள், சாதா­ரண யேம­னி­யர்­க­ளுக்­கான வேலை வாய்ப்­புகள் மற்றும் மேற்­கத்­திய செல்­வாக்கின் முடிவு என்­பன இதில் அடங்கும்” என்று, 2015 பெப்­ர­வ­ரியில் வெளி­யான நியூஸ்வீக் அறிக்கை ஒன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஹூதிகளின் விருப்­பத்­துக்­கு­ரிய அர­சியல் அமைப்பு, பெண்­களும் அர­சியல் பத­வி­களை வகிக்­கக்­கூ­டிய தேர்தல் முறையைக் கொண்ட ஒரு குடி­ய­ர­சாக உள்­ளது என்று, யேமன் டைம்­ஸிற்கு அளித்த பேட்­டியில், ஹவுத்தி உள­வா­ளி­யான ஹுசைன் அல்-­பு­காரி என்­பவர் கூறி உள்ளார்.  

இதற்­கி­டையில், ஈராக்­கி­லி­ருந்து ஏவப்­பட்­ட­தாகக் கூறப்­படும் ட்ரோன்கள் தனது கிழக்­கு-­மேற்கு எண்ணெய் விநி­யோக குழாய்த் திட்­டத்தைத் தாக்­கி­யதைத் தொடர்ந்து, சவூதி அரே­பியா தனது கிழக்­கு-­மேற்கு விநி­யோகக் குழாயின் செயற்­பாட்டை தற்­கா­லி­க­மாக நிறுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இருந்­தாலும் பாக்­தாத்தின் கோரிக்­கையைத் தொடர்ந்து, இப்­போ­தைக்கு அதற்கு பதி­லடி கொடுக்கப் போவ­தில்லை என்று சவூதி அரசு கூறி உள்­ளது.  

யேமனில் ஏற்­பட்ட மோதல்­களை அடுத்து கிட்­டத்­தட்ட 86,000 பேர் தமது சொந்த இடங்­களில் இருந்து வெளி­யேறி உள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஹூதிகள் பல்­வேறு கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில், தங்கள் இரா­ணுவ மற்றும் போர் தந்­தி­ரங்­களை முன்­னேற்­று­வ­தற்­காக பல ஆண்­டு­களை செல­விட்­டுள்­ளனர். 

காஸாவில் பலஸ்­தீ­னர்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, மிகவும் துணிச்­ச­லோடு அவர்கள் இஸ்­ரேலைத் தாக்­கிய பின்னர், இந்த குழு மத்­திய கிழக்கின் பல பகு­தி­களில் மிகவும் பிர­ப­ல­ம­டைந்­தது. ஹவுத்­தி­களின் கட்­டுப்­பாட்டில் உள்ள அவர்­களின் அரசு செய்தி நிறு­வ­ன­மான சபாவின் தலைவர் நஸ்ர் அல்-தின் அமீர், "கடந்த 12 ஆண்டுகளாக சவூதி அரேபியா தங்கள் மீது திணித்துள்ள நியாயமற்ற   முற்றுகையை தகர்க்கும் வரை அவர்கள் மீது நாம் அழுத்தங்களைப் பிரயோகிப்போம்" என்று எச்சரித்துள்ளார். இதன் மூலம் தமது விரிவாக்க பயணத்தில் தொடர்ந்தும் முன்னேறுவதற்கான தெளிவான நோக்கத்தை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

சவூதி அரேபியா இப்போதாவது இராஜதந்திரத்துக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் கிழக்கு விவகாரங்களுக்கான முன்னாள் உதவி வெளியுறவுத்துறை செயலாளர் பார்பரா லீஃப் கூறுகின்றார். 

“பல ஆண்டுகளாக சவூதி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சு செயற்பாடுகள் ஹூதிகளுக்கு எதிராக இருந்தபோதிலும், அவர்களைக் கையாள்வதற்கு "யாரும் நேரடியான இராணுவ தீர்வை தெரிவு செய்யவும் இல்லை, அமுல் செய்யவும் இல்லை” என்று அவர் மேலும் கூறி உள்ளார்.  சவூதி அரேபியா தனது அண்டை நாடுகளுடனும், நட்பு நாடுகளுடனும் இணைந்து, ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அசிங்கமான ஏற்பாடுகளை" செய்யவும் வாய்ப்பு உண்டு, என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

லத்தீப் பாரூக்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!