மாத்தறை - ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய இவர், பிரபல பாதாள உலகத் தலைவர்களான 'அங்கொட லொக்கா' மற்றும் 'மாகந்துரே மதுஷ்' ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவராவார்.
அத்துடன், 2024 ஜூலை 08ஆம் திகதி இடம்பெற்ற 'கிளப் வசந்த' கொலைச் சம்பவத்துடனும், 2016 ஏப்ரல் 29ஆம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடனும் இவர் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, 2019 மார்ச் 28ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற மாகந்துரே மதுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டிருந்த இவர், 2023 மே 03ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில், இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்களினால் இவரைக் கைது செய்வதற்கான சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.தீவுகள் ஆராயுங்கள்
அதற்கமைய, கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில இன்று காலை 9.58 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து எரோஃப்ளொட் விமான சேவைக்குச் சொந்தமான SU-288 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகப் பலத்த பாதுகாப்புடன் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!