news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார் கொலை : மருமகன் தப்பி ஓட்டம்!

11 Aug, 2026
மாத்தளை- லக்கலை, தொரபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 78 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபரை பொலிஸ் அதிகாரிகள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மா ஓயா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரால் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்தவருக்கும் இவருடைய மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றியதில், மருமகன் மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு சந்தேகநபர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய லக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!