கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் அதிகளவாக நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை பகுதியில் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி இன்று (03) திங்கட்கிழமை காலை 6:00 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது.
இதனுடன் நாட்டின் மேலும் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகியுள்ளது.
100 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவான ஏனைய பகுதிகள்:
நோர்ட்டன் : 187.8 மி.மீ
தொலஸ்பாகே: 172.0 மி.மீ
நவலப்பிட்டி : 153.4 மி.மீ
அட்டன் : 148.4 மி.மீ
கித்துள்கலை : 140.8 மி.மீ
ஹுணுகல் ஆறு: 137.8 மி.மீ
கொட்டகலை : 137.0 மி.மீ
நானுஓயா : 131.6 மி.மீ
வெவெல்வத்தை : 112.4 மி.மீ
வலெபொட : 101.2 மி.மீ
மத்திய மலைநாட்டிலும், இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.
மலைசார்பான பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உரிய அதிகாரிகளால் அவ்வப்போது வெளியிடப்படும் உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!