தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
யாழ்ப்பாணம், சுழிபுரம் மத்தி பகுதியில் நேற்று மின்னல் தாக்கி 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இவர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தற்போது அந்த இளைஞரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொதுமக்கள் திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!