news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வவுனியாவில் பாதசாரி கடவையின் ஊடாக- வீதியை கடக்க முயன்றவர் ஹயஸ் மோதி உயிரிழப்பு

10 Jul, 2026

பாதசாரி கடவை ஊடாக வீதியை கடந்தவர் விபத் தில் உயிரிழந்த சம்பவம் வவுனியா புளியங்குளம் பகு தியில் நேற்றுமுன் தினம் இரவு இடம் பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பாதசாரி கடவையின் ஊடாக வீதியை கடக்க முயன்றவர் மீது வவுனியா விலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம், மோதி தள்ளிய நிலையில் யாழ்ப் பாணத்திலிருந்து வவுனியா நோக்கி எதிர்த் திசையில் வந்த காரின் சக்கரத்திற்குள் விழுந்துள்ளார். இதனால் கார் அவர் மீது ஏறியுள்ளது.

 இதனால், படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. 

சம்பவத்தில் 55 வயதான ஆண் ஒருவரே, உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங் குளம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!