news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது

02 Nov, 2026
வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! ​

வாட்ஸ்அப் குழு (WhatsApp Group) ஒன்றின் மூலம் பெறுமதியான பரிசுப் பொதியொன்றை வழங்குவதாகக் கூறி, ரூபா 1,455,000/- (பதினான்கு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்) பணத்தைச் சந்தேகநபரான பெண்ணின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. ​

இதனையடுத்து, கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ​அதன்படி, இம் மோசதியுடன் தொடர்புடைய 46 வயதுடைய நுகேகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேகநபர், 2026.10.30 அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ​

இச்சம்பவம் குறித்து கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!