news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா? ரூபா 30 கோடி குதிரை பேரம்

09 Nov, 2026
தமிழகத்தில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான முஸ்தபாவிடம் ரூபா 30 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க பிரமுகர் பி.எம். மன்னனிடம் 2 ஆவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது. மன்னன் மீது இரண்டு பிடிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.புவியியல் காண்

மதுரை மத்திய தொகுதி த.வெ.க எம்.எல்.ஏவாக மதார் பதூருதீன் உள்ளார். முஸ்தபா என்று அழைக்கப்படும் இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அளித்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

“தி.மு.க மற்றும் அ.தி.மு.கவினர் மீண்டும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனக்கும் தொலைபேசி அழைப்பு எடுத்து முதற்கட்டமாக ரூ.15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வருவோம். 

அப்போது த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கூறி மதுரையை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் என்னிடம் பேசினார். என்னிடம் குதிரை பேரம் பேசியவர் குறித்த விபரம் விரைவில் வெளிவரும்” என்று முஸ்தபா கூறியிருந்தார்.

இந்த நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா தரப்பில் மதுரை மத்திய குற்றத்தடுப்பு பொலிசில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. முஸ்தபாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது, 

மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அ.தி.மு.க. பிரமுகருமான பி.எம். மன்னன் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதையடுத்து அவரை இரு தினங்களுக்கு முன்னர் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு ஆஜர்படுத்தப்பட்ட பி.எம். மன்னனை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

சம்பந்தப்பட்ட பொலிசில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பி.எம்.மன்னனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன்படி நேற்று பி.எம். மன்னன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பொலிசார் இரண்டாவது நாளாக நேற்றும் விசரணை மேற்கொண்டனர். 

அ.தி.மு.க பிரமுகர் மன்னன்



மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் முன்பு அ.தி.மு.க பிரமுகர் மன்னன் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. 

இதுஇவ்விதமிருக்க, மன்னன் கைது சம்பவத்துக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். 

பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை த.வெ.க எடுத்துள்ளது என்ற விமர்சனம் அ.தி.மு.க தரப்பில் இருந்து வைக்கப்பட்டது. 

இந்த நிலையில்தான் மீண்டும் மன்னனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. த.வெ.க ஆட்சியை கவிழ்க்க மீண்டும் தி.மு.க, அ.தி.மு.க இணைந்து த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி வருவதாக த.வெ.க தரப்பினர் கூறி வருகின்றனர்.

கைத்தொலைபேசி ஓடியோ அடிப்படையிலேயே அ.தி.மு.க நிர்வாகி மன்னனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை த.வெ.க அரசின் நிர்வாகத்திறனற்ற ஆட்சியினால் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிரணிகள் கடுமையாக குற்றம் சுமத்தி வருகின்றன. த.வெ.கவுக்கு வாக்களித்த மக்களும் தற்போது அக்கட்சி மீது வெறுப்படைந்துள்ளனர்.

எனவேதான் மக்களை திசைதிருப்புவதற்காக இவ்வாறான குற்றச்சாட்டை த.வெ.கவினர் முன்வைப்பதாக தி.மு.க, அ.தி.மு.க தரப்பினர் கூறுகின்றனர்.

மன்னன் என்பவர் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயராக இருந்தவராவார். பேரம் பேசியதற்காக தன்னிடம் செல்போன் உரையாடல் ஓடியோ உள்ளது என்று முஸ்தபா கூறியிருந்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மன்னனை பொலிஸார் கைது செய்தனர்.

முன்னதாக, இதுகுறித்து மதுரை மத்திய தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “த.வெ.க ஆட்சியை கவிழ்க்க மீண்டும் முயற்சி நடக்கிறது. 

தவெகவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்து, தவெகவுக்கு எதிராக வாக்களிக்க என்னிடம் பேரம் பேசினார்கள். ரூ.15 கோடியில் தொடங்கி ரூ.30 கோடி வரை பேரம் பேசினார்கள். திமுக, அதிமுக இணைந்து தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள். என்னிடம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பேரம் பேசினார்” என்று கூறியிருந்தார்.புவியியல் காண்

“எவ்வளவு பணம் கொடுத்தாலும் த.வெ.கவுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க மாட்டோம். இதையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!