வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ் சிறையில் உயிர் மாய்ப்பு
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூபாலசிங்கம் ஜெயகுமார் என அடையாளம் காணப்பட்ட குறித்த கைதி, இன்று காலை யாழ் சிறைச்சாலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திடீர் மரணம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வித்யா கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான இவர், மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மக்களிடையே மீண்டும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!