news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விபத்தில் முதியவர் பலி ; சிசிடிவியால் சிக்கிய கொலையாளி

10 Jun, 2026


மாதம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து, கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடுவாவ, மட்டக்கொட்டுவ பகுதியை சேர்ந்த 72வயதுடைய டி. சிறிசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   

கடந்த மாதம் 29ஆம் திகதி காலை 8:30 மணியளவில், சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை 'தனியவல்லப' தேவாலயத்திற்கு முன்பாக வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் அதிவேகமாக மோதியுள்ளது.

இதில் காயமடைந்த முதியவர் உடனடியாக மாதம்பை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் 1:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மனிதநேயமின்றி முதியவரை வீதியிலேயே போட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்த பொலிஸார், தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் இலக்கத்தையும், அதன் உரிமையாளரையும் அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தே நபரை விரைவில் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை மாதம்பை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!