அமெரிக்காவின் அலபாமாவின் ஹன்ட்ஸ்வில்லே நகரில் இருந்து யுனைட்டைட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஹூஸ்டன் நகருக்கு கிளம்பியது. அதில் பயணிக்க பெண் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். விமானத்தில் ஏறிய பிறகு தான் அவரைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லாதது தெரிந்தது.
இருக்கையில் அமர்ந்ததும் அவரிடம், ஒருவர் மட்டும் தான் என எண்ணாமல், விமான பணியாளர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பற்றி விளக்கினர். அதனை அந்த பெண்ணும் சிரித்தபடி கவனித்தார்.விமானம் கிளம்பியதும், மணல்மூட்டைகளை கேபினுக்குள் ஊழியர்கள் அடுக்கி வைத்தனர்.
விமானத்தில் பயணிகள் இருக்கும் பகுதி காலியாக இருக்கும்போது ஈர்ப்பு விசை மாறக்கூடும். அந்த கூடுதல் எடை அதை உள்ளே இழுக்கும். இதனால் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் சிறியஜெட் விமானத்தில், அந்த பிரச்னையை தீர்ப்பதற்கு மணல் மூட்டைகளை வழக்கமாக பயன்படுத்துவார்கள்.
விமானம் தரையிறங்கி, ஓடுபாதையில் நகர்ந்ததும், அந்த பெண்ணை உள்ளே வருமாறு விமானி அழைத்தார். அவர் சென்றதும் இருக்கையில் அமர்ந்து சுற்றிப் பார்க்கும்படி கூறினார். தனியாக கிளம்பிய அவரது பயணம், வாழ்க்கையில் மறக்க முடியாததாக மாறிவிட்டது.
இதனை மகிழ்ச்சி தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!