news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரு சிறுவர்கள் பலி

12 Sep, 2026
தெகிவளை சிரிசங்கபோ வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (11)  (அதிகாலை) நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி எப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 11 மற்றும் 17 வயதுடைய இரு ஆம்பளைச் சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் தந்தை (55) படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

'கொஸ்மள்ளி' எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள எனக் கூறப்படும் இந்த வீட்டின் மீது, 'கூடு அஞ்சு' தரப்பு உறுப்பினர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் குழுக்கள் இரண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சிறுவர்கள் இருவரும் மற்றும் அவர்களின் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!