news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வீதி விபத்துக்களால் இதுவரையில் 2400 பேர் பலி

17 Nov, 2026
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் காரணமாக 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

 

அதன் இணைப்பாளர் வைத்தியர் ருவன் துஷார குறிப்பிடுகையில், நவம்பர் 15 ஆம் திகதியுடன் 2,414 பேர் வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வீதிப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழுவின் இணைப்பாளர் மருத்துவர் ருவன் துஷார இதனைக் கூறினார்.

"இந்த ஆண்டில் 2026 நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை வீதி விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2,414 க்கும் அதிகமாகியுள்ளது. இது மிகவொரு பெரிய எண்ணிக்கையாகும்,

அதாவது மாதத்திற்கு 230 பேர் வரை மரணிக்கின்றனர். எமக்கு இந்த ஆண்டில் இன்னும் ஒன்றரை மாதங்கள் மாத்திரம் உள்ளன.

நாம் எப்படியாவது இந்த மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

நேற்றுவரை பதிவான மரணங்களில், குறிப்பாக நாம் குறிப்பிட வேண்டியது மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகம்.

அதுபோல 800 க்கும் அதிகமான பாதசாரிகளும் மரணித்துள்ளனர். இந்த இரண்டு பிரிவுகளுமே 2,000 க்கும் அதிகமான தொகையைக் கொண்டுள்ளன என்றார்.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!