வெனிசுவெலா நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பூகம்பத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய இளைஞர் ஒருவர் 6 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24ஆம் திகதி வெனிசுவெலாவில் அடுத்தடுத்து 7.2 ரிச்டர் அளவிலும் 7.5 ரிச்டர் அளவிலும் இரண்டு பூகம்பங்கள் இடம்பெற்றன.
இந்த இரட்டை பூமியதிர்ச்சியினால் கராகஸ் மற்றும் லா குவைரா ஆகிய பகுதிகளில் பல கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் விழுந்து தரைமட்டமானதில் அந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி, 1719 பேர் உயிரிழந்ததாகவும் 5000க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கு 72 மணிநேரம் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட பின்னரும், தற்போதும் 2000க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் இடிபாடுகள் காணப்படும் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மீட்புக் குழுவினரால் ஈடுபடுத்தப்பட்டிருந்த மோப்ப நாய் கொடுத்த சமிக்ஞையின் அடிப்படையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.
அத்துடன் மற்றொரு இடிபாட்டில் சிக்கியிருந்த நாய்க்குட்டியொன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!