news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு மாதந்தம் 10,000 ரூபா கொடுப்பனவுj

20 May, 2026

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளின் நலன் கருதி அவர்களுக்கு மாதாந்தம் நிதி உதவி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, பெற்றோர் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், அவர்களின் 2 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் (Daycare Centers) இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இந்த விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர்.


நாடாளுமன்றில் கலந்துரையாடல்

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் நாடாளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே இத்தீர்மானம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதால் சமூகத்தில் எழும் பல்வேறு குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்து தலையிடுமாறு, இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு இந்த ஆலோசனைக் குழு அறிவுறுத்தியிருந்தது.

அந்த அறிவுறுத்தல்களின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து நாடாளுமன்றக் குழுவினர் வினவிய போதே, அதிகாரிகள் இந்த 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவுத் திட்ட விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளின் முறையான பராமரிப்பு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!