வேலணை - செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து முதிய சகோதரர்கள் இருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
74 வயதுடைய ஆண் ஒருவரும், அவரது 73 வயதுடைய சகோதரியுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகளால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதற்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொலிஸார் பரிசோதித்த வேளையில், ஆண் வீட்டின் வெளியே உயிரிழந்த நிலையிலும், பெண் வீட்டின் உள்ளே உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.
இதில் பெண்ணின் சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையிலும், மற்றைய நபர் உயிரிழந்து சுமார் 48 மணிநேரம் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களுடன் மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவரும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதற்கு சில தினங்களுக்கு முன்னர் அரச பதிவுகளுக்காக அந்த வீட்டிற்குச் சென்ற கிராம உத்தியோகத்தர் குறித்த இருவர் தொடர்பிலும் கேட்டறிந்தபோது, அவர்கள் இருவரும் உள்ளே உறங்குவதாக அந்த மாற்றுத்திறனாளிப் பெண் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!