news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஷஷி வீரவன்சவின் 2 வருட சிறைத்தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

18 Nov, 2026
முறையற்ற விதத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவிற்கு எதிராக விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (18) உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் சமர்ப்பித்த மேன்முறையீட்டைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அந்த மேன்முறையீட்டை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!