news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் சிறையில்! ; நான் மகிழ்ச்சியடையப் போவதில்லை - அர்ச்சுனா

08 Oct, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியையும், அவரது மகனையும் சிறையில் அடைத்துள்ளதால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். மஹிந்தவையும் கோட்டாவையும் கைது செய்தால் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள். புலம்பெயர் அமைப்புகளிடம் பெற்ற நிதிக்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது. நான் மகிழ்ச்சியடையப் போவதில்லை என யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஊழல் மோசடிகள் சட்டத்தின் மூலம் பிரபாகரனாலும் செய்ய முடியாமல் போனதை அரசாங்கம் ராஜபக்ஷர்களுக்கு செய்துள்ளது. மஹிந்த  ராஜபக்‌ஷவையும் அவரின் மனைவியையும் அவரின் மகனையும் சிறையில் அடைத்து எமது மக்களை உற்சாகப்படுத்துகின்றீர்கள்.  நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து பெற்ற நிதிக்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.

அரசியலில் எதிரானவர்களை அரசாங்கம் சிறையில் அடைக்கிறது. டயஸ்போராக்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். மஹிந்தவின் மனைவி ஷிரந்தியை சிறையில் அடைத்துள்ளதால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். 

ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. அரசாங்கம்  அரசியல் செய்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷ மாரடைப்பு ஏற்பட்டு இறக்க வேண்டுமாயின் அவரது மனைவியை சிறையில் அடையுங்கள்.

மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது மனைவி,  கோட்டாபய ராஜபக்‌ஷ, நாமல் ஆகியோரை சிறையில் அடைக்குமாறு  புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளன. இதனால் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு வடக்கில் ஆதரவு கிடைக்கும். ஆனால் தெற்கில் தோல்வியடைய நேரிடும் என்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!