ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதியில் குளறுபடி!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை மற்றும் துபாய் கிளைகளுக்கான கொடுப்பனவுகளில் பாரிய நிதித் தவறு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். வழங்கப்பட வேண்டிய நிதியானது தவறுதலாக அபுதாபி இஸ்லாமிய வங்கியில் உள்ள வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் உடனடி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு தவறுதலாக அனுப்பப்பட்ட சுமார் 97,450 டிர்ஹாம் (AED) நிதி, அங்கிருந்து மீண்டும் மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அந்த நிதியை மீட்டெடுப்பதில் தற்போது பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தனக்குக் கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்த முறைகேடு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!