மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹட்டன் டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, கால்வாயின் இருபுறங்களிலும் உள்ள பல வீடுகள் மற்றும் வாகனம் திருத்தும் நிலையம் இன்று (3) வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
2013ஆம் ஆண்டிலும், டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடி, இதேபோன்றதொரு பேரழிவு அப்போது ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியும் நீரில் மூழ்கியுள்ளது.








<

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!