news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஹபராதுவை விபத்து: பேருந்தின் சாரதி, நடத்துனர் கைது!

25 Oct, 2026
ஹபராதுவை, கொக்கல பகுதியில் ரயில் கடவையில் ரயில் மோதி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொக்கல பகுதியில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் கொட்டாவ பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த பேருந்து இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது, பேருந்தில் சுமார் 41 மாணவர்கள், 14 தனியார் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் 06 பெற்றோர்கள் உட்பட மொத்தம் 61 பேர் பயணித்துள்ளனர்.

காயமடைந்த 14 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் சிகிச்சைக்காக காராபிட்டிய மற்றும் உனவட்டுன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேருந்தின்  40 வயதுடைய சாரதியும், 21 வயதுடைய நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!