Site icon ilakkiyainfo

VIRAL PHOTO: இப்போ அவரோட ‘ஹெல்த்’ எப்படி இருக்கு…? ‘சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ…’ – உருகும் ‘கேப்டன்’ ரசிகர்கள்…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் சிகிச்சைச்சையின் போது செவிலியர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் கடந்த காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். கதாநாயகனுக்கு இந்த அம்சங்கள் இருக்கவேண்டும் என மாயக்கோட்டைகளை அடித்து தகர்த்தவர்.

திரைப்படத்துறையில் மட்டுமல்லாது அரசியலில் நுழைந்து பெரும் செல்வாக்கு மிக்க தலைவராக உருவானார்.

ஆனால், சில வருடங்களாக அவரின் உடல்நிலை கோளாறுகளால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், வீட்டில் ஓய்வெடுத்தும் வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் பிறந்தநாளை அவரின் ரசிகர்களும், திரைப்படத்துறையினரும், அரசியல் கட்சி உறுப்பினர்களும் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிலையில் மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த், தற்போது தன் டிவிட்டர் பக்கத்தில் செவிலியர்களுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிந்துள்ளார்.

அதில், ‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜயகாந்த் அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

Exit mobile version