ilakkiyainfo

இந்திய மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 7; தமிழகத்தில் ஏப்ரல் 24 வாக்களிப்பு

எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவெங்கும் ஏப்ரல் 7ல் தொடங்கி மே மாதம் வரை, 9 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை இந்தியாவெங்கும் மே மாதம் 16ந்தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தொடர்புடைய விடயங்கள்

வாக்குப்பதிவு, வெவ்வேறு மாநிலங்களில், ஏப்ரல் 7, 9. 10, 12, 17, 24. 30 மற்றும் மே 7 மற்றும் 12ம் தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும், ஏப்ரல் 24ம் தேதி ஒரே நாள் வாக்குப்பதிவு நடக்கும்.

புதிய, 16வது மக்களவை மே மாதம் 31ம் தேதிக்குள் உருவாக்கப்படவேண்டும்.

130920025319_india_elections_624x351_reuters
உலகின் மிகப் பெரிய தேர்தல்

இந்தத் தேர்தலில் சுமார் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். கடந்த தேர்தலின்போது இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட சுமார் 10 கோடி புதிய வாக்காளர்கள் கூடுதலாக சேர்ந்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் சுமார் 9.3 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்தலில் வழக்கம்போல மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

வாக்காளர்கள் போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையென்றால், அதற்குரிய “நோட்டா” (NOTA) விருப்பத்தேர்வு பொத்தானும் இயந்திரத்தில் உள்ளது.

வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும், பெயர்கள் இல்லையென்றால் சேர்த்துக்கொள்ளவும் , தங்கள் விவரங்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கும் வண்ணம் , அந்தந்த வாக்குச்சாவடிகளில் மார்ச் 9ம் தேதி சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

மேலும் வாக்காளர்களுக்கு, அவர்கள் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட வாக்காளர் அட்டைகளை, தேர்தல் வாக்குப்பதிவுக்கு மூன்றிலிருந்து ஏழு நாட்கள் முன்னதாக அவ்ர்கள் வீடுகளுக்கே சென்று வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கான , நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

Exit mobile version