ilakkiyainfo

எனது மூன்று சகோதரர்களையும் படையினரே வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்: இதுவரை தகவல் எதுவுமில்லை; ஆணைக்குழு முன் சகோதரி கண்ணீர்மல்க சாட்சியம்

உயர்­தரம் படித்துக் கொண்­டி­ருந்த என்­னு­ டைய சகோ­த­ரர்கள் 3 பேரை முறக்­கொட்­டாஞ்­சேனை இரா­ணு­வ­மு­கா­மி­லி­ருந்து வந்த படை­யி­னரே மட்­டக்­க­ளப்பு சித்­தாண்டி முரு கன் கோயி­ல­டியில் வைத்து, வாக­னத்தில் ஏற்றிச் சென்­றனர் என சகோ­த­ரர்­களை தொலைத்த சகோ­த­ரி­யொ­ருவர் கண்ணீர் மல்க நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காணாமல் போன­வர்கள் தொடர்பில் வியா­ழக்­கி­ழமை முதல் விசா­ர­ணை­களை நடத்தி வரும் காணாமல் போனோர் தொடர்­பாக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு முன்­நி­லையில் சாட்சியமளிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

நேற்­றைய தினம் வெள்ளிக்­கி­ழமை கிரான் றெஜி கலாச்­சார மண்­ட­பத்தில் ஆணைக்­குழு விசா­ர­ணைகள் நடை­பெற்­றன. கோர­ளைப்­பற்று தெற்கு மற்­றும் கோர­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர் பிரிவு­க­ளுக்­கான விசாரணைகள் நடை­பெற்­றன.

தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளித்த அவர்,

1990ஆம் ஆண்டு யுலை மாத இறு­தியில் மட்­டக்­க­ளப்பின் முறக்­கொட்டான் சேனையில் எங்­க­ளது காணி அடங்­க­லான பிர­தேசத்தில் இராணுவம் முகா­மிட்­டது.

அதனால் அப்­போது நாங்கள் கொஞ்சம் தூரத்­தி­லுள்ள சித்­தாண்டி முருகன் கோவி­லுக்கு பாது­காப்­புக்­காகச் சென்று தங்­கினோம். எங்­களைப் போல் அதி­க­மா­ன­வர்கள் வந்­த­மை­யினால் அது அகதி முகா­மாக இயங்­கி­யது.

அந்த முகாம் ஆரம்­பித்து சில நாட்­களில் ஆகஸ்ட் 02ஆம்­தி­கதி வாக­னங்­களில் வந்த இரா­ணு­வத்­தினர் அப்­பி­ர­தே­சத்தைச் சுற்றி வளைத்து அங்கு கொண்டு வரப்­பட்­டி­ருந்த   முக­மூடி பொம்­மை­யாக இருந்­த­வ­ரிடம் ஒவ்­வொ­ரு­வ­ராக்­காட்டி எனது அண்ணன் வீர­பத்­திரர் பொன்­னுத்­துரை, வீர­பத்­திரர் அருள்­நாதன், வீர­பத்­திரர் சசி­தரன் ஆகியோர் உட்­பட 17பேரை வாக­னங்­களில் ஏற்றிச் சென்­றனர்.

இரா­ணு­வத்தின் காலில் விழுந்து எங்­க­ளது சகோ­த­ரங்கள் எந்தத் தொடர்பும் இல்­லா­த­வர்கள். அவர்­களை விட்டு விடுங்கள் என அழுதோம். விசா­ரணை இருப்­ப­தா­கவும் முடிந்­தபின் வி­டு­வ­தா­கவும் கடு­மை­யாகச் சொன்­னார்கள்.

அதன் பின் எந்தத் தக­வலும் இல்லை. கொழும்பு, களுத்­துறை உள்­ளிட்ட சிறைச்­சா­லைகள் உட்­பட பல இடங்­க­ளிலும் எங்­க­ளது சகோ­த­ரங்­களைத் தேடி அலைந்­தி­ருக்­கிறோம். எந்­தப்­பி­ர­யோ­ச­னமும் இல்லை. எங்கு சென்று கேட்­டாலும் இல்லை என்றே சொல்­கி­றார்கள்.

அண்­மையில் முறக்­கொட்­டான்­சேனை இரா­ணுவ முகா­மி­லி­ருந்து எங்­க­ளது வீட்­டுக்கு வந்த இரா­ணு­வத்­தினர் உங்­க­ளது சகோ­தரர்கள் இருக்கிறார்கள்.

அவர்­க­ளது பிறப்புச் சான்­றி­தழ்­களைத் தாருங்கள் என்று கேட்­டார்கள். நாங்கள் அவர்­க­ளது சான்­றி­தழ்கள் எல்லாம் வன்­செ­யலில் அழிந்து போய்விட்­டன என்றே சொன்னோம்.

எனது மூத்த சகோ­தரன் தேநீர் கடை வைத்து வியா­பாரம் செய்து வந்தார். மற்­றைய சகோ­த­ரர்கள் உயர்­த­ரமும், சாதா­ரண தரமும் படித்துக் கொண்­டி­ருந்­தார்கள். எப்­போது வரு­வார்கள் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே இருந்து கொண்டிருக்கிறோம்.

அம்மா இப்­போதும் என்­பிள்ளை வருவான் என்றே சொல்லிக் கொண்­டி­ருக்­கிறார். நான் ஒரு ஆசி­ரி­யை­யாக இருந்த போதும் இப்­போது விடு­முறை எடுத்து இங்கு வந்­தி­ருக்­கிறேன். இப்­போதும் முறக்­கொட்­டான்­கேனை இரா­ணுவ முகாம் இருக்­கி­றது, எங்­க­ளது சகோ­த­ரங்கள் தான் இல்லை. அவர்கள் வீட்­டுக்­குத்­தி­ரும்­பு­வ­தையே இப்­போதும் எதிர்­பார்க்­கிறோம்.

கோர­ளைப்­பற்று தெற்கு பிர­தேச செய­லாளர் பிரிவில் 64 விண்­ணப்­பங்­களும், கோர­ளைப்­பற்று வடக்கில் 214 விண்­ணப்­பங்­களும் ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் 55 பேரது விட­யங்கள் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டன.

நேற்று முன்­தினம்   ஏறாவூர் பற்று பிர­தேச செய­லாளர்  பிரிவில் நடை­பெற்ற விசா­ர­ணை­களில் 54 பேருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த போதும், 39 பேர் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர் அதே ஏறாவூர் பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 424 முறைப்­பா­டுகள் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அத்­துடன் அன்­றைய தினம் புதி­தாக 250 பேர் முறைப்­பா­டு­களைப் பதிவும் செய்­தனர்.

நேற்­றைய அமர்வில், காணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்­கி­ரம பரா­ண­கம, ஆணை­யா­ளர்­க­ளான திரு­மதி மனோ ராம­நாதன், திரு­மதி சுரஞ்­சனா வித்­தி­ய­ரத்ன ஆகியோர் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். அத்­துடன், சட்ட அதி­கா­ரி­க­ளான சமிந்த அத்து­கோ­ரல, துசித் முத­லிகே ஆகி­யோரும் முறைப்­பா­டு­களைப் பதிவு செய்தனர்.

அதே நேரம் ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று வடக்கு பிர தேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டனர்.

ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை காலை முதல் மண் முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வாகும்.

வட்டுக்கோட்டையில் சுற்றிவளைப்பு: பதற்றம்
22-04-2014
srilankaarmyயாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுவருகின்றது. இதனால் அப்பகுதியில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான  இளைஞர்கள்;  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியிலுள்ள வட்டுக்கோட்டை, சங்கரத்தை, மாவடி, மூளாய், பொன்னாலை போன்ற பிரதேசங்களிலேயே சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

இந்தச் சோதனை நடவடிக்கைக்காக மக்கள் எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லையென்றும் அவ்வாறு வெளியே செல்பவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

கிளிநொச்சி,தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது  பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து    இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் நேற்றிரவு தொடக்கம் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தப்படுகின்றது.

சம்பவத்தை கேள்வியுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டைப் பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி இளைஞன் கைது
22-0-2014


மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் நேற்று கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்து வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.

தற்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும்,தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

தற்போது குறித்த இளைஞர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடையம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது..

கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த இளைஞரை மன்னார் வங்காலைப்பாட்டு கிராமத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்து நேற்று (21) தலைமன்னார் பொலவிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.நாங்கள் விசாரனைகளின் பின் சனிக்கிழமை(22) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்தார்.

Exit mobile version