ilakkiyainfo

அமெரிக்க அதிபர் ஒபாமாவை மனிதக்குரங்கு போல புகைப்படம் வெளியிட்ட பெல்ஜியம் பத்திரிகை.

BjWTYSbCEAEQTF2

பெல்ஜியம் நாளிதழ் ஒன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவையும், அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவையும் மனிதக்குரங்கு போல வடிவமைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளது.

அந்த பத்திரிகை மீது பெல்ஜியம் அரசு கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் De Morgen என்ற புகழ்பெற்ற பத்திரிகை பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த பத்திரிகை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும்   அவரது மனைவி மிச்சேல் ஒபாமா ஆகிய இருவரது புகைப்படங்களையும் மனிதக்குரங்கு போன்று போட்டோஷாப்பில் மாற்றி, தங்களது பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் இந்த புகைப்படத்தை தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வெளியிட கூறியதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து பெல்ஜியம் அரசு மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி அடைந்துள்ளன. De Morgen பத்திரிகைக்கு கடும் கண்டனங்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறது. இதனால் பெல்ஜியம் அரசு அந்த பத்திரிகை மீது கிரிமினல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.

Exit mobile version