Site icon ilakkiyainfo

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு!!

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம்.

இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன. 2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை.

ஆனால் இலங்கை அரசு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குவதாக கூறி அதன் ஆதரவு அமைப்புகளையும் தடை விதித்தது. இப்படியான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றன.

தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் அதுவும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஒரேயடியாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version