ilakkiyainfo

தன் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டவரை பழிவாங்கிய கரடி! (வீடியோ)

வேட்டைக் காரரால் சுடப்பட்ட கரடி ஒன்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் தன்னை சுட்டவரின் காரை மாத்திரம் அடித்து நொறுக்கிய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஷ்யாவின் கேண்டி-மன்ஸி ஹெடானமஸ் ஓக்ரக் என்ற பகுதியில் வேட்டைக் காரர் ஒருவர், தன் நண்பருடன் கரடி வேட்டைக்குச் சென்றுள்ளார். காட்டுப்பகுதியில், தன் கண்ணில் பட்ட கரடியை சட்டென் சுட்டுள்ளார். ஆனால் குண்டு கரடியில் பின் புறத்தில் மட்டும் லேசாக பட்டு கரடி தப்பியோடிவிட்டது.

குண்டடி பட்ட கரடியை வேட்டைக் காரரும் அவரது நண்பரும் காட்டினுள் தேடித் திருந்தனர். எங்கு தேடியும் கரடி கிடைக்காத நிலையில், பின்னர் வீட்டிற்கு திரும்ப தங்கள் வாகனம் இருந்த இடத்திற்கு வந்துள்ளனர் நண்பரும் வேட்டைக்காரரும்.

அங்கு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவர்களது வாகனம் கடுமையாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.  ஆனால், இவர்களது வாகனத்திற்கு அருகில் இருந்த வாகனங்கள் மீது சிறு கீரல் கூட விழாமல் இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

இதன் பின், அருகில் இருந்த கால்தடத்தை வைத்து, தாங்கள் பின் புறத்தில் சுட்ட கரடி தான் இவ்வாறாக வந்து தாக்கியுள்ளதை உணர்ந்தனர், வேட்டைக்கார நண்பர்கள்.

கரடியின் இந்த விந்தையான செயல்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி இணையங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
152863நடிகையின் கவர்ச்சியில் மயங்கும் சிங்கம்

09-10-2014

அமெரிக்காவின் பிரபல நடிகையான மெலனி கிரிபித் சிங்கம் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். நடிப்பு தவிர்ந்த ஏனைய பொழுதுகளை சிங்கத்துடனேயே கழிகின்றன.

தனது செல்லப் பிராணியை வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்று களிப்பூட்டுவதாக மெலனி தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளில் கவர்ச்சி நடிகைகளில் பிரபலமான மெலனி, தனது கவர்ச்சியில் சிங்கம் ஆசைகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version