ilakkiyainfo

மொகரம்: ஷியா முஸ்லீம்கள் ரத்தம் சொட்டச் சொட்ட துக்கம் அனுஷ்டிப்பு (வீடியோ)

சென்னை: மொகரம் பண்டிகையை ஒட்டி நெஞ்சிலும், முதுகிலும் பிளேடால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஷியா முஸ்லீம்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னையில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்குப் பகுதியில் மொகரம் அனுஷ்டிக்கப்பட்டது. முஸ்லீம் மாதங்களில் முதல் மாதமான மொகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இம்மாதத்தின் 10ம் நாளில் நபிகள் நாயகத்தின்(ஸல்) பேரன் இமாம் ஹூசைன்(ரலி) கர்பலா என்ற யுத்த களத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருடன் தன்னுயிரையும் இழந்தார். இமாம் ஹூசைன் போரில் கொல்லப்பட்ட இந்தநாளை துக்க தினமாக ஷியா முஸ்லிம் பிரிவினர் அனுசரிக்கின்றனர்.

இதனை முன்னிட்டு சென்னையில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் மொகரம் மாதத்தின் முதல் தேதியில் பஞ்சத்தன் என்ற கொடிமரத்தை வைத்து சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் கருப்பு கொடியேற்றி தங்களது துக்கத்தை தெரிவிக்கும் வகையில் மொகரம் முதல் தேதியிலிருந்து வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் கருப்பு உடையணிந்து கொள்கின்றனர்.

 04-1415103626-muharram-600சிறப்பு தொழுகை
இமாம் ஹூசைன் கொல்லப்பட்ட 10ம் தேதி (நேற்று) வரை அவர்கள் விரதம் இருந்தனர். தொடர்ந்து நேற்று மதியம் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

துக்க தின ஊர்வலம்
படையல் போடப்பட்ட பின்பு துக்க பாடல்களுடன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் நெஞ்சில் ஓங்கி அடித்துக் கொண்டு தொழுகை கூடத்தை கொடிமரத்துடன் வலம் வந்தனர்.

த்தம் சொட்ட சொட்ட

தொடர்ந்து உடம்பில் பிளேடினால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்களும் நெஞ்சில் அடித்துக் கொண்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

கிருஷ்ணகிரியில் அனுஷ்டிப்பு
மொகரம் பண்டிகையையொட்டி பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்திலுள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் தங்கள் உடம்பை கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

Exit mobile version