ilakkiyainfo

பெண் ஒருவரை பணயக்கைதியாக பாவித்து தப்பிக்க முனைந்த நபருக்கு அமெரிக்க போலீசின் பதிலடி. (வீடியோ)

பெண் ஒருவரை பணயக்கைதியாக பாவித்து தப்பிக்க முனைந்த நபர் ஒருவரை அமெரிக்க SWAT காவல் துறையினர் சாமர்த்தியமாக போட்டுத் தள்ளுவதையே இந்த வீடியோவில் பார்க்குறீர்..

கொலராடோ டென்வர் பகுதியில் உள்ள 7 இலவன் என்ற சுப்பர் மார்க்கட்டில் வைத்து நடைபெற்ற இந்த பரபரப்பான நிமிட தாக்குதலின் போது பணயக்கைதியாக சிக்கிய பெண்ணோ, போலிஸ் அதிகாரியோ எந்தவித காயமும் படாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது.

3,325 சீக்கியர்கள் படுகொலைக்கு நீதி கேட்டு ஒபாமாவிடம் முறையீடு
04-10-2014

sikeஇந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அந்தப் படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

சீக்கியர்களுக்கு எதிரான இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள  ‘சீக்கியர்களுக்கான நீதி’ [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் அந்த கலவரங்களினால் பாதிக்கப்பட்டு  தற்போது  அமெரிக்காவில் வாழும்  இருவர்   இணைந்து ‘1984ம் ஆண்டு  நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட  இழப்புக்கு  காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தி இழப்பீடு வழங்க வேண்டும்’ என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது, நினைவிருக்கலாம்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இடம்பெற விரும்பும் இந்தியா சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கலவர வழக்கில் வெறும் 30 பேர் மீது மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் கட்சியினரையும், முன்னாள் அரசு அதிகாரிகளையும் இந்திய அரசு பாதுகாத்து வருவதாகவும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

திட்டமிடப்பட்ட இந்த படுகொலைகள் விவகாரத்தில், தலையிட்டு கலவரத்தின்போது பலியான மற்றும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு உரிய நீதி கிடைக்க உதவிடுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அந்த அமைப்பினர் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

 

Exit mobile version