Site icon ilakkiyainfo

சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் கைது

தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லி­களின் சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் என அழைக்­கப்­படும் கண­ப­திப்­பிள்ளை சிவ­மூர்த்தி என்­பவர் நேற்­றைய தினம் முற்­பகல் 11 மணி­ய­ளவில் நீர்­வேலி தெற்குப் பகு­தியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் உடையில் வந்­த நான்கு பேரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த கைது நட­வ­டிக்கை தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இரவு நீர்­வே­லியில் உள்ள நகு­லனின் இல்­லத்­துக்கு சென்ற நான்­குபேர் அவர் தொடர்­பாக வீட்­டி­லி­ருந்­த­வர்­க­ளிடம் விசா­ரணை செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் நேற்­றைய தினம் முற்­பகல் 11 மணி­ய­ளவில் மீண்டும் அவ­ரது வீட்­டிற்கு சென்ற குறித்த நால்வர், மீண்டும் நகுலன் தொடர்­பாக விசா­ரித்­த­துடன் அவர் தற்­போது எங்­குள்ளார் என வீட்­டி­லி­ருந்­த­வர்­க­ளிடம் கேட்­டுள்­ளனர்.

இதன்­போது நகுலன் நீர்­வேலி கரந்­தனில் உள்ள தோட்­டத்துப் பயிர்­க­ளுக்கு நீர்­பாய்ச்­சு­வ­தாக அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் சிவில் உடையில் நின்ற நால்­வரும் குறித்த தோட்­டத்­துக்குச் சென்று ந­கு­ல­னுடன் உரை­யா­டி­ய­துடன் அவரை விசா­ர­ணைக்­காக யாழ்ப்­பாணம் அழைத்துச் செல்­வ­தாக உற­வி­னர்­க­ளிடம் தெரி­வித்து கைது செய்­துள்­ளனர்.

இதன்­போது நகு­லனின் தந்­தையும் அவ­ருடன் யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்­றி­ருந்தார். இந்­நி­லையில் நகு­லனை கொழும்பு தலை­மை­யக விசா­ர­ணைக்கு அழைத்துச் செல்­ல­வுள்­ள­தாக அவ­ரது தந்­தை­யிடம் கைது செய்த சிவில் உடை தரித்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

விடு­த­லைப்­பு­லிகளின் சாள்ஸ் அன்­ர­னி­படைப் பிரிவின் தள­ப­தி­களில் ஒரு­வ­ரான கண­ப­திப்­பிள்ளை சிவ­மூர்த்தி (நகுலன்) என்­பவர் இரா­ணு­வத்­திடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் அவர் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்து முழுநேர விவசாயியாக வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version