Site icon ilakkiyainfo

அலிசாகிர் மௌலானா மூலம், கருணாவை கொழும்புக்கு கொண்டு சென்றவர் ரணில் விக்கிரமசிங்கவே!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணாவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த   அலிசாகிர் மௌலானா மூலம் கொழும்புக்கு வரழைத்ததாகவும் கூட்டு   எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறினார்.

அத்துடன் கருணாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து, கட்சியின் உப தலைவர் பதவியையும் மகிந்த வழங்கியதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறினார். எனினும் கருணாவை கொழும்பு அழைத்து வந்தது யார் என்பதை ரணில் விக்ரமசிங்க மறந்து விட்டார்.

ரணில் விக்ரமசிங்கவே அலிசாகிர் மௌலானா மூலம் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்து ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் தங்க வைத்து, அலரி மாளிகையில் சாப்பாடு வழங்கினார்.

உயிர் அச்சம் காரணமாக இறுதியில் அலிசாகிர் மௌலான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேர்ந்தது. இந்த நிலையில் அநாதரவாக கைவிடப்பட்ட கருணாவை மகிந்த ராஜபக்சவே காப்பற்றினார்.

அதேபோல் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் பிரதமர் ரணில் கூறினார்.

யார் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தது?.ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுமே புலிகளுக்கு பணத்தை கொடுத்தனர்.

அரச பணத்தை கொடுத்தனர், இது பகிரங்கமாக சம்பவம். அரச பணத்தை வழங்கியது ஒப்புவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகளே ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர்களாக இருக்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவே அன்று பிரதமராக இருந்தார். அவற்றை மறந்து விட்டு ரணில் தற்போது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்.

விஜயகலா மகேஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து விலகியது போதாது, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும். அல்லது நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த பொறுப்பு சபாநாயகரிடமே உள்ளது என காமினி லொக்குகே கூறியுள்ளார்.

Exit mobile version