ilakkiyainfo

பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்!’ – பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்

பட்டுக்கோட்டை அருகே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே என்பவரை கொலை செய்து  பெட்ரோல் ஊற்றி எரித்து  அதன் சாம்பலை மூன்று சாக்குகளில் மூட்டையாகக் கட்டி வாய்க்காலில் துாக்கி வீசிவிட்டதாகக் கூறி ஆவிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சரணடைந்தார்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், `நானும் பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனேவும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டபோது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி நினைவிழந்து மயங்கி விழுந்தார்.

அவரை எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால், அவர் இறந்துவிட்டார். இதனால், அவருடைய சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இப்படிச் செய்துவிட்டேன்’’ எனக் கூறி போலீஸாரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் சொந்த ஊரிலேயே இருந்து வந்துள்ளார்.

இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியான பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனேவுடன் மாமல்லபுரத்தில் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

பியாரே பூட்டியார், பிரான்ஸில் தொழிலதிபர் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஐந்து வருடமாக இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிக்கடி பிரான்ஸிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து திருமுருகனைச் சந்தித்து வந்துள்ளார்.

போட்டோ எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழகத்தின் முக்கியமான இடங்கள், கோயில்கள் என அனைத்தையும் தான் வரும்போது போட்டோ எடுப்பார்.

237efc77-5331-4856-b31c-5262c2f8716a_18026இதேபோல்தான் கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பு மாமல்லபுரம் வரும்போது திருமுருருகனுடைய நட்பு ஏற்பட்டிருக்கிறது. நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதால், இருவரிடையே நட்பு இன்னும் கூடியிருக்கிறது.

அதன் பிறகு, அவர் பிரான்ஸ் சென்றுவிட, தொலைபேசியில் இருவரும் நட்பை வளர்த்திருக்கிறார்கள். பிறகு, தமிழகம் வரும்போதெல்லாம் இருவரும் சந்திப்பது வழக்கமாக இருந்துள்ளது.

இதற்கிடையே, இவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இது குறித்த விசாரணையில் திருமுருகன் போலீஸாரிடம் தெரிவித்திருப்பதாவது, `சென்னையில் உள்ள ஓர் இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்தேன்.

அப்போது, ஒருநாள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றேன். அங்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

68 வயது ஆகும் அவர், பிரான்ஸ் நாட்டில் தொழிலதிபராக உள்ளார்.  இதையடுத்து 2 பேரும் நண்பர்கள் ஆனோம்.

மேலும், பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே தமிழகம் வரும்போது என்னைத் தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். அதன்படி 2 பேரும் பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளோம்.

எங்களுக்குள் ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 31-ம் தேதி பியாரே பூட்டியார்பெர்னாண்டோரெனே சுற்றுலாவாகச் சென்னை வந்தார்.

3-ம் தேதி வரை சென்னையில் தங்கி இருந்த அவர், பின்னர் திருச்சி வந்தார். திருச்சியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர், 5-ம் தேதி என்னைத் தொடர்புகொண்டார்.

இதையடுத்து, திருச்சி சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள எனது வீட்டுக்கு வந்தேன். அங்கு வைத்து 2 பேரும் மது குடித்தோம்.

பின்னர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டபோது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி நினைவிழந்து மயங்கிவிழுந்தார்.

அவரை எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால், அவர் இறந்துவிட்டார். இதனால் அவருடைய சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன்.

பின்னர், எனது வீட்டின் சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல் டயர் ஆகியவற்றைக்கொண்டு பியாரே பூட்டியார் பெர்னாண்டோரெனே உடலை எரித்தேன்.

எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல் மற்றும் எரியாமல் கிடந்த சதைப்பகுதியை 3 சாக்குகளில் அடைத்து மூட்டையாகக் கட்டி மதுக்கூரிலிருந்து வாட்டாக்குடி செல்லும் சாலையில் இரட்டை புளியமரத்தடி அருகே உக்கடை வாய்க்காலிலும் பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் உள்ள ஒரு வயலிலும் போட்டுட்டு வந்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாகத் திருமுருகனிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ள போலீஸார், பிரான்ஸிலிருந்து பெர்னாண்டோரெனேவின் உறவினர்கள் யாராவது தொடர்புகொண்டார்களா என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

Exit mobile version