ilakkiyainfo

சமாதானத்தை வலியுறுத்தி நல்லிணக்க முயற்சி

இலங்கையில் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைவரும் இன மத பேதம் இன்றி சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மன்னாரைச் சேர்ந்த 38 வயதான அன்ரன் கிருஸ்னன் டயஸ் என்பவர் மன்னார் தள்ளாடி பகுதியில் இருந்து அனுராதபுரம் வரை தரையில் உருண்டு செல்லும் நல்லிணக்க முயற்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை ஆரம்பித்துள்ளார்.

IMG_1302மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஆன்மீக மற்றும் ஆயுல்வேத , சித்த வைத்திய ரீதியில் தேர்ச்சி பெற்றாவராக காணப்படுகின்றார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை மன்னாரில் இருந்து ஆரம்பித்த குறித்த முயற்சி எதிர்வரும்  40 நாட்களில் அனுராதபுரத்தை சென்றடையும் வகையில் தனது முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

நாள் ஒன்றிற்கு சுமார் 5 கிலோ மீற்றர் தரையில் உருண்டு செல்ல தீர்மானித்துள்ளார்.இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது பயனத்தை ஆரம்பித்து திருகேதீஸ்வரம் , மடு ஊடக அனுராதபுரத்தை சென்றடைந்து தனது நல்லிணக்க பயணத்தை முடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக அனேக பொதுமக்கள் இவ் முயற்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வருகின்றனர் சமாதனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடதக்கது

Exit mobile version