தற்கொலை செய்து கொண்டவர் இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் கடந்து 06.02.2020 அன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என தங்களின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோயில் வளாகத்தினுள்ளே பூசகர்களுக்கென வழங்கப்பட்டுள்ள வீட்டிலேயே மேற்படி தற்கொலையானது நிகழ்ந்துள்ளது எனவும் தற்போது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்மபவம் தொடர்பான மேலதிக விசாரணையை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.